சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது கோவை மாநகர சைபர் கிரைம் மேலும் ஒரு வழக்கில் அவரை சிறையிலேயே கைது செய்துள்ளனர். கிஷோர் கோ சுவாமி ஜாமினில் வெளியே வருவதை தடுக்கும் வகையில், காவல்துறையின்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாஜக ஆதரவா வளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி மழை வெள்ளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் தேதி இரவு டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 21ந்தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர்மீது கோவை காவல்துறை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துளளது.
கடந்த மாதம் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இதற்காக சென்னையில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமியை கோவை அழைத்துச் சென்று, கோவை 4 வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். அப்போது, அவருக்கு மேலுல் 15 நாட்கள், அதாவது டிசம்பர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.
ஆட்சியாளர்களை விமர்சிக்கும் சமூக ஊடகங்களையும், சமூக ஊடவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்து மிரட்டும் போக்கு பொதுமக்களிடையே திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.