சென்னை: தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள கிஸான் திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்று உள்ளதாகவும், இது தொடர்பாக 37 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருப்பதுடன், 80 அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார்.
ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் ‘கிசான் திட்ட’த்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்ததுள்ளது. சுமார் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 37 அதிகாரி கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தாகவும், 80 அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
ஏழை விவசாயிகளுக்கு நேரடி நிவாரணம் அளிக் கும் வகையில், பிரதமரின் கிசான் திட்டம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில், பயனாளி ஒருவருக்கு 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 39 லட்சம் தகுதியான பயனாளி களுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியான விவசாயிகள் பலர் விடுபட்டு விட்டதாக விவசாய சங்கத்தினர் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, விவசாயிகளுக்கான இணையதளத்தில் புதிய வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியது. அதன்படி, விவசாயிகள் தாங்களே தங்கள் பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், நிலத்தின் விவரங்களை பதிவு செய்யலாம். அதற்கு மாவட்ட நிர்வாகம், வட்டார அலுவலகம் அதே இணையதளம் வாயிலாக ஒப்புதல் அளித்தால், அவர் களது பெயர் பதிவு செய்யப்பட்டுவிடும்.
கடந்த 5 மாதங்களாக மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணி களில் ஈடுபட்டனர். இதனால், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வட்டார அளவில் விவசாயிகளின் பதிவுகளுக்கு ஒப்புதல் அளிப் பதற்கான இணையதள உள் நுழைவு முகவரி, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவை சில பகுதிகளில், குறிப்பாக கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மாவட்ட பகுதி களில் அதிகாரிகளிடம் இருந்தன. பதிவு செய்யப்படும் விவசாயிகளின் ஆதார் சரியானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக இவை வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், கணினி மையங்கள், கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அதிக அளவிலான பயனர்களை சேர்த்து, அசிங்கப்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 6 லட்சம் பயனாளிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டி ருந்தனர். மற்ற 25 மாவட்டங்களில் மொத்தமாகவே ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்தபோதுதான், முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இது தொர்பாக ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை 5 லட்சம் பேருக்கும் மேலான பயனாளிகள் சந்தேக பட்டியலில் இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி மூலம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, இதுவரை 18 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், கவனக்குறைவாக இருந்த, வேளாண் துறை உதவி இயக்கு நர்கள் உட்பட 37 அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணினி இயக்குபவர், ஏடிஎம் பிளாக் மேலாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் உட்பட 80 பேரை பணி நீக்கம் செய்துள்ளோம். சிபிசிஐடி விசாரணை முடிவில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதியில்லாத 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளி களிடம் இருந்து பணத்தை பெற, வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.32 கோடி திரும்ப பெறப் பட்டுள்ளது. இதைவிட 3 மடங்கு, அதாவது ரூ.110 கோடி வரை திரும்ப பெறப்பட வேண்டியுள்ளது. ஒன்றரை மாதத்தில் முழு பணத்தையும் திரும்ப பெறுவோம். அரசிடம் அனைத்து தகவல்களும் இருப்பதால் யாரும் தப்பிக்க முடியாது என்று ககன்திப்சி பேடி தெரிவித்த உள்ளார்.