திருவண்ணாமலை: கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டார்.

இந் நிலையில், இன்று 20வது மாவட்டமாக திருவண்ணாமலைக்கு சென்றார். முதல்கட்டமாக ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம்.  4 மாதத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 46 லட்சமாக உயர்ந்துள்ளது. முறைகேட்டில் தற்போது 18 பேர் கைது செய்யப்பட, 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.