கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகவில் தினசரி தொற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
மாஸ்க் முதல், தடுப்பூசி வரை அனைத்து உள்கட்டமைப்பு இருந்தும் அதை நிர்வகிக்க முடியாத அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களின் தவறான கொள்கைகளே இந்த அவலத்திற்கு காரணம் என்ற பேச்சு எழுந்து வருகிறது.
We are collectively suffering for the collective sins committed by our greed for more, in every consumption in all forms.
Answer lies in beginning with one’s own-self. Not wait for others to begin.
However those visible owe it more to lead by example.
But no one needs to wait— Kiran Bedi (@thekiranbedi) April 22, 2021
இந்நிலையில், நாம் அனுபவிக்கும் துயருக்கு நாம் செய்த பாவம் தான் காரணம் என்று கிரன் பேடி பதிவிட்டிருக்கும் டிவீட் அந்த பேச்சை உறுதி செய்வது போல் உள்ளது.
https://twitter.com/babu7472/status/1385105508638466052
பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் அதுவும் வடஇந்தியாவில் இருந்து இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு
அனைத்து பிற்போக்கு தனமான தடைகளையும் தகர்த்தெரிந்தவர் இப்படி அபத்தமான ஒரு பதிவை போட்டிருப்பது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பாவத்திற்கு அவரும் காரணம் பா.ஜ.க. ஆட்சி அமைய மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு மக்களின் மீது பழி போடும் இவரது செயல் எந்த கங்கையிலும் கழுவமுடியாத பாவம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.