புதுச்சேரி

கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா எனப் புதுச்சேரி பார்களில் திடீர் ஆய்வு நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிய மாநிலமாக இருந்தாலும் தற்போது 4787 பேருக்கு கொரோன் பாதிப்பு உள்ளது.

எனவே இங்குச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் மது அருந்தும் பார்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த பார்களில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையொட்டி பார்களில் திடீர் ஆய்வு நடத்த அளுனர் கிரண் பேடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.