தாய்லாந்து:
தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவரை திருமணம் செய்து கொண்ட தாய்லாந்து அரசர், அவருக்கு அரசிக்குரிய தகுதியை வழங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்ட அரசிப் பட்டத்தை பறித்து உள்ளார்.
மோகம் 30நாள், ஆசை அறுபதுநாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 66வயது மன்னர் தனது 34வயது காதல் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரது அரசி பதவியை பறித்துள்ளார்.
70 ஆண்டுகளான தாய்லாந்தை ஆட்சி செய்த முன்னாள் அரசர் பூமிபோன் அடூன்யடேட் உலகிலேயே அதிக ஆண்டுகள் அரசராக ஆட்சி செய்த பெருமையை பெற்று 2016ம் ஆண்டு காலமானார். அவரைத் தொடர்ந்து, 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் 2016ம் ஆண்டு அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.
தாய்லாந்து நாட்டில், 2014ம் ஆண்டு தாய்லாந்து ஏர்வேய்ஸின் முன்னாள் விமானப் பணியாளரான சுதிடா டிட்ஜேயை (வயது 34) என்பவரை தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவராக வஜ்ராலங்கோர்ன் நியமித்தார். அவருக்கும், மன்னருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் கொண்டதாக கூறப்பட்டது.
அதையடுத்து, சுதிடா டிட்ஜே தாய்லாந்து நாட்டின் அரசியாகவும் அறிவிக்கப்பட்டார். அவர் மணிமுடி ஏற்கும் வகையில் புனிதப்படுத்தும் சடங்குகள் நடைபெற்றன.
இந்த நிலையில், தற்போது சுதிடா டிட்ஜேவிடம் இருந்து அரசி பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணம் ஆகி 3 மாதமே ஆன நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தாய்லாந்து மன்னர் மாளிகை, ராஜா விசுவாசமற்ற தன்மைக்காக பட்டங்களையும் ராணுவ பதவிகளையும் தனது மனைவியிடம் இருந்து பறிப்பதாகவும், அவர், தனது சொந்த நலனுக்காக நாட்டின் மகாராணியின் மதிப்பை குறைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ராணியின் நடவடிக்கைகள் “அவமரியாதைக்குரியவை, நன்றியுணர்வு இல்லாதது, மற்றும் அரச ஊழியர் களிடையே பிளவுகளை ஏற்படுத்துதல், மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துதல் மற்றும் தேசத்தையும் முடியாட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், அரசியார், மன்னருக்கு உண்மையாக இல்லாதது மற்றும் மகாராணிக்கு சமமாக நடந்து கொள்ள முயன்றது போன்ற காரணங்களுக்காக அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக மன்னர் வஜிரா லோங்கார்னின் வெளியிட்டுள்ள அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மன்னர் வஜிரா லோங்கார்ன் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். அவருக்கு 7 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.