லண்டன்:
பொது வாழ்வில் இருநது விலக முடிவு செய்திருப்பதாக இங்கிலாந்து அரசர் பிலிப் கோமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து அரண்மனை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆகஸ்ட் வரை ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளில் மட்டும் அரசியுடனோ அல்லது தனியாகவோ கலந்து கொள்வார்.
இதன் பிறகு எந்த பயணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பு கொள்ளமாட்டார். இருப்பினும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் நேரத்திற்கு ஏற்றவாறு கலந்து கொள்வது குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 91 வயதாகும் அரசி எலிசபெத் அரசு பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப் கோமான் அடுத்த மாதம் தனது 96வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
Patrikai.com official YouTube Channel