சென்னை:
மார்ச் 10ந்தேதி டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அன்றைய தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-7 (S7 Coach) பெட்டியில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது அவசியம் என கருத்தி, அந்த குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்தவர்கள் உடனே தொடர்பு கொள்ள பிரத்யேக டெலிபோன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கட்டுப்பாட்டு அறை டெலிபோன் எண்: 0471-2309250 to 55. (State Control Room No. 0471-2309250 to 55) உடனே தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமை…