இந்தியாவில் கொரோனா பரவலின் 4வது ஸ்டேஜ் (கட்டம்) தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் அதன் தாக்கம் மூர்க்கத்தனமாக இருக்கும். இதிலிருந்து, பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது….
உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முதல் இரண்டு ஸ்டேஜ்களின் போதும், அதன் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டு வரும். 3வது, மற்றும் 4வது ஸ்டேஜ் களில்தான் அதன் தாக்கம் மூர்க்கத்தனமாக காணப்படும்… கொத்துக்கொத்தாக மக்களின் உயிர்களை குடிக்கும்..
இதன் காரணமாகவே இந்திய அரசு 21 நாட்கள் முழு ஊரடங்கை (2வது ஸ்டேஜ் முதல் 4வது ஸ்டேஜ் வரை) அமல்படுத்தியது. மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது.
இது, கொரோனா வைரஸ் தொற்று பரவிய முதல் நாடான சீனா முதல் தற்போது பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்க போன்ற நாடுகளில் பெருகி வரும் உயிர்பலிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவின் தாக்கம் இரண்டு கட்டங்களை தாண்டி இன்று முதல் 3வது கட்டத்தில் புகுந்துள்ளது. இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும், ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு கட்டங்களில் கொரோனாவின் தாக்கம் வீரியம் இல்லாமல் நார்மலாகவே சென்றுகொண்டிருக்கிறது..
ஆனால், இன்று ஸ்டேஜ் 3 தொடங்கி விட்டது.. இந்த காலக்கட்டத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக நேற்று முதல் வெளியாகி வரும் அதிர்ச்சிகரமான செய்திகளும், உயிர்ப்பலிகளும் உங்களுக்கு புரிய வைத்திருக்கும்.
இந்த கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் 5 நாள்களில் மேலும் தீவிரம் அடையும், அதைத் தொடர்ந்து இறுதிக்கட்டமான 4வது ஸ்டேஜூக்கு செல்லும்.
இந்த காலக்கட்டங்களில் பொதுமக்கள் ஊரடங்கை சிரமேற்கொண்டு, வீடுகளிலேயே இருந்து உங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினர், அண்டை வீட்டார், உங்கள் பகுதி, உங்கள் ஊர், உங்கள் நாட்டு மக்களின் சுகாதாரத்திலும் நம்பிக்கை வைத்து, கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ளுங்கள்.
இல்லையேல்… பேரழிவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வரும்…எச்சரிக்கையுடன் வீடுகளுக்குள்யே இருங்கள்.. மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மதியுங்கள்…
இதுகுறித்து டாஸ்க்-போர்ஸ் ஒருங்கிணைப்பாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன என்பதை பார்க்கலாம்…
இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சரி… யார் இந்த டாக்டர் கிரிதர் ஞானி
டாக்டர் கிரிதர் ஞானி இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கிறார். ஹெல்த்கேர் ப்ரோவைடர் சங்கத்தின் நிறுவனரான இவர், தற்போது கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
இந்த பணிக்குழு நிதி ஆயோக் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த இவர் தற்போது கொரோனா தடுப்பில் களமிறங்கி பணியாற்றி வருகிறார்.
கொரோனா தாக்கம் – இந்தியாவின் தற்போதைய நிலைமை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் ஸ்டேஜ் 3 பரவல் தொடங்கிவிட்டது. ஆனால், அரசு இதை இதை ஸ்டேஜ் 3 என்று கூறவில்லை, இருந்தாலும், நாம் ஸ்டேஜ் 3க்குள் நுழைந்துவிட்டோம் என்பதை மறுக்க முடியாது, அதுதான் உண்மை.
இனி வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பான அதிக கேஸ்கள் வரலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளவர், நம் நாட்டில், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போதுமான பயிற்சி பெற்ற மருத்துவர்களோ, சுகாதாரத்துறை பணியாளர்களோ இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இதுமட்டுமின்றி நமக்கு தற்போது போதிய அவகாசமும் கிடையாது. அதனால், கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதுதான் சிறந்தது.
அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இந்த அறிகுறிகள் இல்லையென்றால் அவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவது இல்லை. இதை சோதனை முறைகளை மாற்ற வேண்டும். அதிக அளவில் சோதனைகளை செய்ய வேண்டும். சோதனைகளை அதிக அளவில் செய்து, மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியம்.
அதேபோல் கொரோனாவிற்கு எதிராக மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும். 3 கோடி பேர் இருக்கும் இடத்தில் குறைந்தது 3 ஆயிரம் பெட்களை தயார் செய்ய வேண்டும்.
அடுத்த ஐந்து நாட்கள் அபாயகரமானவை
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் 3வது கட்டத்திற்குள் சென்றுள்ளதால், அடுத்த 5 நாட்கள் அல்லது 10 நாட்களில் அதன் தாக்கம் வெறித்தனமாக இருக்கும். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும்… அதுமட்டுமின்றி கொரோனாவால் ஏற்படும் உயிர்பலிகளும் அதிகரிக்கும்.
கொரோனா உயிர் பலிகளை தடுக்கும் வகையில், முதலில் இதற்கான பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எல்லோருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
தேவைப்படுமாயின், மருத்துவ கல்லூரிகளின் விடுதிகளை காலி செய்து, அதை மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தயார் செய்ய வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணம் அடைந்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் எல்லோரையும் தனி தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனாவின் பரவல் தன்மை எப்படி?
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 4 கட்டங்களாக (ஸ்டேஜ்) பரவி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டேஜ் 1 என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.
ஸ்டேஜ் 2 என்பது கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.
ஸ்டேஜ் 3 என்பது அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இதை கட்டுப்படுத்த முடியாது.
(இந்த காலக்கட்டம்தான் இந்தியாவில் தற்போது, நிலவி வருகிறது. கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் பாதிப்புதான் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு)
ஸ்டேஜ் 4 என்பது இந்த கம்யூனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
விழித்திரு – விலகி இரு – வீட்டிலேயே இரு… கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…