தூத்துக்குடி:  பிரபல நிறுவனமான  ‘கே.எஃப்.சி’ சிக்கன் கடையில் ரசாயனம் கலந்த எண்ணையில் உணவுப் பொருட்கள் பொறிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறையினர் அங்கு நேரடி சோதனை நடத்தி, கடை உரிமத்தை ரத்து செய்து, கடையை மூடியுள்ளது.

தமிழக மக்கள் உள்பட நாடு முழுவதும் கே.எஃப்.சி. சிக்கனுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர், அங்கு வழங்கப்படும் பொரித்த கோழியை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிறுவனமானது   வாடிக்கையாளர்களை கவர,  சிக்கன்களில் பல்வேறு வகையான உணவுகள் தயாரித்து, பயனர்களுக்க ருசியாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் உபயோகப்படுத்தும் கோழிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதன் ருசி, அந்நிறுவனத்தின்மீது யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு சிக்கன் உள்பட உணவு பொருட்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கேஎஃப்சி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சிக்கன் பொரிக்க பயன்படுத்து வந்த  எண்ணையில், தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் கலந்து  பயன்படுத்தப்பட்டது தெரிய  வந்துள்ளது.  உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் இந்த  ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது உணவு பாதுகாப்பு துறையினரால்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த   ‘கே.எஃப்.சி’ சிக்கன கடை உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி பகுதியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பழைய எண்ணையை சுத்திகரிக்க மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி, இதை உபயோகப்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் துரித உணவுகள் மட்டுமின்றி, இதுபோன்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

பொதுவாக கோழி இறைச்சி உடலுக்கு ஆரோக்கியமானதுதான். ஆனால்,  தற்போது அதிக அளவில் விற்பனையாகும் பிராய்லர் கோழி ஆரோக்கியமற்றது என பல ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

இதுபோன்ற கோழிகள், வளர்க்கப்படும் விதம், மட்டுமின்றி  தற்போது விற்பனை செய்ய மற்றும் அதை பதப்படுத்த மற்றும் பொரிக்க பல்வேறு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது. மேலும், எ பிராய்லர் கோழிகள் குறைந்த நாள்களில் அதிக எடையுடன் வளர்வதற்காக ஒவ்வொரு கோழிக்கும் ஹார்மோன் ஊசிகள் செலுத்தப் படுகின்றன என்ற உறுதிப்படாத தகவல்களும் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த கோழிகள் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.

இதனால்,  இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்.  எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள். பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும்.  இதுமட்டுமின்றி, இதில் உள்ள ரசாயனப் பொருட்கள், பெண்களை விரைவில் வயதடைய செய்கிறது என்பதும்,  முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமின்றி சிக்கன் சமைக்க பயன்படுத்தப்படும் பல்வேறு மசாலா பொருட்களில்  மேலும் ருசிக்க அஜினோ மோட்டோ மட்டுமின்றிபல்வேறு ரசாயனப் பொருட்களும் கலக்கப்படுகின்றன.  அதனால், பொதுமக்களே, பெற்றோர்களே தங்களது சந்திகளை ஆரோக்கியமாக வளர்க்க, இதுபோன்ற உணவுகள், துரித உணவுகள் உண்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் வைத்து, ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குங்கள்.

பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…