லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பையும், தகவல் பதாதைகளையும் வைத்து விழிப்புணர்வு  ஏற்படுத்தி வரும், சிங்கப்பூர் மாநில சுகாதாரத்துறை, தற்போது விழிப்புணர்வு வீடியோவையும் தமிழில் வெளியிட்டு அசத்தி வருகிறது.

ஆனால், இந்தியாவிலும் கோரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய அரசோ, தமிழக அரசோ இதுகுறித்து எந்தவொரு விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

சிங்கப்பூர் அரசு தமிழ் உள்பட 4 மொழிகளில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பிரசுரம்

முதன்முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கோரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி, இந்தியா உள்பட உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் முன்னேற்பாடு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை, அங்கு வசித்து வரும் பெரும்பாலான தமிழர்களின் நலன் கருதி தமிழில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், தமிழில் வீடியோ வெளியிட்டும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது வைரலாகி வருகிறது

சிங்கப்பூர் சுகாதாரத்துறை தமிழில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ… …

https://www.youtube.com/watch?v=NN5pnPQW2-4&feature=youtu.be

இந்தியாவிலும் கோரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுட உள்ளனர்.  டெல்லியில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாகவும், மேலும் கேரளா உள்பட பல மாநிலங்களில், சீனாவில் இருந்து வந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும்,  சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை விமான நிலையத்தில் செய்திருந்தாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே.

விலங்குகளின் உணவில் இருந்து கோரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலேயும் அதுபோல பல மாமிச சந்தைகளும், அதில் லட்சக்கணக்கானோர் மாமிசங்களை வாங்கி உண்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தவறி உள்ளது.

சிங்கப்பூர் அரசு செய்து வரும் கோரோனா வைரஸ்  விழிப்புணர்வு நிகழ்வுகளை பார்த்தாவது தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்குமா? 

கீழே காணப்படும் துண்டுபிரசுரங்கள், சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் நலனுக்காக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது…

வீடியோ: Thanks SG