வாஷிங்டன்:

டகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-ஐ வியட்நாமில் இந்தமாதம் (பிப்ரவரி) 27, 28ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் 2 நாட்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்தார்.

உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரி அதிபர் கிம்மும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் 12ந்தேதி  சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர்.   வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின்  இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

இது உலக அளவில் மிக முக்கிய அமைதி நடவடிக்கையாக வர்ணிக்கப்பட்டது.  இரு தலைவர் களும் சமரச முயற்சிகளுக்கு இசைந்து, சந்தித்துப் பேசியது தெற்காசியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே சற்று நிம்மதியைத் தந்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்கள் குறித்து பேச இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதுபோன்ற சில பிரச்சினைகளுக்கு  தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புதல் வழங்கிய நிலையில், கிம் டிரம்ப் சந்திப்பு எப்போது எங்கே நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  வியட்நாமில் நடக்கலாம்  என்றும், அங்கு பாதுகாப்பு ஏற்படுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இநத் நிலையில்,  அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்  பேசிய அதிபர் டொனல்டு ட்ரம்ப்  இந்த மாத இறுதியில்  வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாக தெரிவித்தவர், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறினாரி,.