ன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பது உண்மைதான் என்று, கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

முதன்முறையாக வளைகுடா நாடுகளுக்கு  அசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்பதை ஒப்புக்கொண்டார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்களின் வரலாற்றில் முதல் முறையாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் வளைகுடா நாடுகளில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அபுதாபியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள  ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய மசூதிக்குச் சென்றார்.

மசூதியின் தலைமை இமாம்  சேக் அகமது அல் தயீப், போப் ஆண்டவரை வரவேற்று அழைத்துச் சென்றார். அங்கு நடைபெற்ற இஸ்லாமிய பெரியோர் கூட்டத்திலும் போப் பங்கேற்றார். அந்த மசூதிக்கு வருகை தந்த முதல் போப், பிரான்சிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் முகம்மது பின் சையத் நேரில் வந்து போப் பிரான்சிஸை வரவேற்று அபுதாபி அரண் மனைக்கு அழைத்துச்சென்றார். அப்போது, ஏமன், சிரியா நாடுகளில் ஏராளமானோர் வீடிழந்து உறவுகளை இழந்து ஆதரவற்றோராக நிற்கின்றனர்.பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என அங்குள்ள நிலை வருத்தத்தை தருகிறது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இரு தரப்பும் தங்கள் பிடிவாதத்தை தளர்த்தி அமைதி தீர்வுக்கு முன்வர வேண்டும், என்றார்.

மன்னர் கூறுகையில், போப்பின் வருகையால் மத நல்லிணக்கம் பெருகும். அமைதிக்காக போப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம்.போப்பின் இந்த வருகையின்போது அமைதிக்கான ஒத்துழைப்பு, மாற்று ஏற்பாடுகள், பேச்சுவார்த்தை மூலம் வன்முறைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்க உள்ளோம், என கூறினார்.

அதைத்தொடர்ந்து வளைகுடா நாடுகளில் வாழும்  கிறிஸ்தவர்களின் மத்தியில் போப்  பேசினார். அப்போது, கன்னியாஸ்திரிகள் மற்றும் பேராயர் குறித்து கருத்து தெரிவித்தார். பல இடங்களில் கன்னியாஸ்திரிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று கூறிய போப், பிஷப்களும் கன்னியாஸ்திரிகளை பாலியல் தொல்லை செய்கின்றனர் என்றும், பாதிரியார்களால், கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்  என்றும் கூறினார்.

கத்தோலிக்க மதத்தலைவரான போஸ் பிரான்சிஸ், கன்னியாஸ்திரிகளை பிஷப்கள் பாலியல் சேட்டை செய்வதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.