சியோல்:
வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இதை, தென் கொரியா மற்றும் சீனா மறுத்துள்ளன.
கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் அதிபராக இருப்பவர், கிம் ஜாங் உன், 36. 2011ம் ஆண்டு முதல், அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். அணு ஆயுத சோதனைகொரோனா பரவலால், உலகமே நடுங்கி கொண்டிருக்கும் நிலையில், ‘வடகொரியாவில், வைரஸ் தொற்று இல்லை’ என கூறி, கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
வட கொரியாவின் தந்தை என, அழைக்கப்படுவர், கிம் ஜாங் உன்னின் தாத்தா, கிம் இல் சுங். ஆண்டுதோறும், ஏப்., 15ம் தேதி, கிம் இல் சுங்கின் பிறந்த நாள், வட கொரியாவில், ‘சூரியனின் நாள்’ என, கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், அதிபர், கிம் ஜாங் உன் பங்கேற்பது வழக்கம். ஆனால், கடந்த, 15ம் தேதி நடந்த இந்த விழாவில், கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை.
கடைசியாக, கடந்த, 11ம் தேதி நடந்த அரசு கூட்டத்தில், கிம் ஜாங் உன் பங்கேற்றதாக கூறப் படுகிறது. வடகொரியாவில் பத்திரிகை சுதந்திரம் கிடையாது. தலைவர்கள் குறித்த தகவல்கள், எளிதில் வெளியாகாது.இந்நிலையில், அமெரிக்காவின் சி.என்.என்., செய்தி சேனல் வெளியிட்ட செய்தியில், ‘வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது’ என, கூறப் பட்டது. அறுவை சிகிச்சைஇதையடுத்து, கிம்ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து, சீனா மற்றும் தென் கொரியா சந்தேகம் தெரிவித்துள்ளன. வடகொரிய விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும்.
தென்கொரிய இணைய பத்திரிகை ஒன்றில், வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ள தாவது: அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக, வடகொரிய அதிபர் கிம்முக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு, கடந்த, 12ம் தேதி, ஹியாங்சன் கவுண்டி என்ற இடத்தில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர், தலைநகர் பியோங்யாங்குக்கு, கடந்த, 19ம் தேதி திரும்பியுள்ளார். அவரது உடல் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவில்லை.
வடகொரியாவில் இருந்து வழக்கத்திற்கு மாறான, எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது. வட கொரிய விவகாரங்களை கவனிக்கும் சீனாவும், ‘கிம்ஜாங் உன் கவலைக்கிடமாக உள்ளார் என்ற தகவலை நம்ப முடியாது’ என, தெரிவித்து உள்ளது.