சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும், ரயில் நிலைம், அடுத்த மார்ச் மாதத்துக்குள் (2025) பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் உடனே பணி தொடங்கி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புறங்களில் செல்ல போதுமான வசதிகள் இல்லை. மேலும் சில மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து, கிளம்பாக்கத்தில் ரேயில் நிலையம் அமைக்க வேண்டும், மெட்ரோ ரெயில் நிலையம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம் அமைக்க, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு நிலத்த கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்” என்றார்.