ஒரு படத்தின் ஷுட்டிங்கை, முடிவு செய்ய வேண்டியவர், அதன் டைரக்டர்.

கொடுமை என்ன வென்றால், பெரிய இயக்குநரான ஷங்கருக்கு தனது
“இந்தியன் -2” படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியவில்லை.

கமலஹாசன் மனது வைத்தால் தான் உண்டு என்ற நிலையில், சும்மா இருக்க முடியாமல் ராம் சரணை ஹீரோவாக வைத்து தெலுங்கு படத்தை டைரக்டு செய்ய கிளம்பி விட்டார், ஷங்கர்.

ராம் சரண் மட்டுமே முடிவாகியுள்ள நிலையில் படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதம் ஆரம்பமாகிறது.

ராம் சரண் ஜோடியாக பல நடிகைகள் பெயர் அடிபட்ட நிலையில், கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரணும், கியாராவும் ஏற்கனவே “வினய விதேய ராமா” என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இருவரும் சேரும் இரண்டாவது படம் – இது.

– பா. பாரதி

[youtube-feed feed=1]