சென்னை: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற  லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, நடிகை குஷ்புக்கு பாஜக தேசிய குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த வருண்காந்தி, மேனகா காந்தி போன்றோர் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தலைமையின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கை பாஜக தலைவர்கள், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. உள்பட சில மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகளில் பல்வேறு மாற்றங்களை பாஜக தலைமை செய்து வருகிறது. முதல்வர்கள் மாற்றம், கட்சி தலைமை மாற்றம் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய செயற்குழு உள்பட பல்வேறு குழுக்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார்.

அதன்படி,  80 உறுப்பினர்கள் கொண்ட  பாரதிய கட்சியின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டிய வெளியிடப்பட்டு உள்ளது. இதில், லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, பாஜகவைச் சேர்ந்த  பில்பித் தொகுதி எம்.பி. எம்.பி. வருண் காந்தி, அவரது தாயாரும், முன்னாள மத்திய அமைச்சருமான  மேனகா காந்தி, ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும் நீக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கு புதிய உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 80உறுப்பினர்கள் கொண்ட  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 80 உறுப்பினர்களில் 37 பேர் மத்திய அமைச்சர்கள் .

அடுத்த ஆண்டு உ.பி.சட்டமன்ற தேர்தலை நடைபெறுவதையடுத்து, அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.  நிர்வாகக் குழுவில் மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா மற்றும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 80 உறுப்பினர்களில் 12 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களில் 6 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் தொடர்ந்து தேசிய நிர்வாகக் குழுவில் உள்ளனர்.

அதுபோல, ஜே.பி. நட்டா அறிவித்துள்ள  தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் (பொன்னார், எச்.ராஜா பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளது., நடிகை குஷ்புவுக்கு பொறுப்பு  வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! யோகிக்கு எதிராக குஷ்பு போர்க்கொடி…

நடிகை குஷ்புவும் லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து, பாஜக தலைமைக்கு எதிராகவும், உ.பி. மாநில பாஜக அரசுக்கு எதிராகவும் கடுமையாக விமர்சிருந்த நிலையில், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே சம்பவம் குறித்து விமர்சித்த வருண்காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…