டெல்லி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பூரி சம்பவத்துக்கு தவறான நிர்வாகமும் அலட்சியமுமே காரணம் எனக் கூறியுள்ளார்.

புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மயளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாலிகார்ஜுன கார்கே/
“புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது, சுமார் 50 பேர் காயமடைந்தது மிகுந்த வேதனை தருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த யாத்திரையில் சுமார் 500 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த துயரச் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம். இதை மன்னிக்கவே முடியாது.
இந்த சம்பவம் குறித்து மாநில அரசு முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுபோன்ற விழாக்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் பெருங்கூட்டத்தை முறையான திட்டமிடல் உடன் கையாள வேண்டியது அவசியம்”
எனத் தெரிவித்துள்ளார்.