டில்லி
காங்கிரஸ் தலைவர் கார்கே நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் என்று உரையாற்றி உள்ளார்.
ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில்,
”இது நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகும். நாமெல்லாம் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க.வை எதிர்கொள்ள முடியும். மாறாக நமக்குள் நாமே மோதிக்கொண்டிருந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது.
தேர்தல் களத்தில் சமநிலை போட்டியில்லை.மைதானத்தில் பள்ளம் தோண்டி வைத்து விட்டு பிரதமர் மோடிடு எதிர்க்கட்சிகளை அதில் கிரிக்கெட் விளையாடும்படி கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸும் பாஜகவுm விஷத்தைப் போன்றவை. அவற்றை ருசிக்க வேண்டாம். பாஜகவினர் நாட்டை அழித்துவிட்டனர். அவர்களால் நாட்டை மேலும் அழிக்க அனுமதிக்கக்கூடாது. நாடு வளர்ச்சியடைய மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும்”
என்று கூறி உள்ளார்.