டெல்லி

ன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மத்திய அரசை காப்பாற்றும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார்.

இன்று 2024-25 ஆம் வருடத்துக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகாஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கார்கே,

”மத்திய நிதி அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்துள்ளார்ர். இது சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது.

மத்திய பட்ஜெட்டை நாட்டின் முன்னேற்றத்திற்காக பாஜக அரசு தயாரிக்கவில்லை. தங்களுடைய மத்திய அரசை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர்.

எங்களுடைய 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதார திறனை மேம்படுத்த எந்த சிறப்புத்திட்டமும் இல்லை.

மேலும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான திட்டமோ ரயில்வே குறித்தோ மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. முக்கியமாக விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”

என்று கூறியுள்ளார்.