டில்லி

பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடி பணியாது என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர்.   அவரை அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர்.  இன்று அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன அனுப்பியுள்ளது/

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து டிவிட்டரில்.

”எதிர்க்கட்சிகளின் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்  இது, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும், பிளவுபடுத்தவும் பாஜக அரசின் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதை ஆகிவிட்டது.

அதே சமயத்தில், மோடியின் பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒற்றுமையாக நிற்க முடிவு செய்துள்ளன. ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கும் கோழைத்தனமான தந்திரங்களுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது”

என்று பதிந்துள்ளார்.