டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளின் சக்கா ஜாம்  மறியல் போராட்டத்தின்போது, விவசாயி ஒருவரின் டிராக்டரில் காலிஸ்தான் கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் போராட்டம் திசை திருப்பப்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 73வது நாளாக தொடர்கிறது. முன்னதாக ஜனவரி 26ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. மேலும், டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்ற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அங்கு வன்முறையில் ஈடுபட்ட பல விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,பல டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 6-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில், டெல்லியை தவிர்து நாடு முழுவதும்   தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ‘சக்கா ஜாம் ‘என்ற பெயரில் சாலை மறியல் போராட்ட;த்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின்போது,  விவசாயிகள் நடத்திய சாலை மறியலின்போது, காலிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டு மேலும்  சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற விவசாயிகளின் சாலை  மறியல் போராட்டத்தின் போது,  ஒரு டிராக்டரில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்த்ரன்வாலே உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புக்கொடி பறந்தது. இதை விவசாயிகள் கண்டுகொள்ளாத நிலையில், காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் அமைதியாக நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 26ந்தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையை உருவாக்கியது. இதற்கு வேறு பல அமைப்புகள் காரணம் என்று விவசாய சங்கத்தினரே குற்றம் சாட்டி உள்ளனர்

இந்த நிலையில் பிப்ரவரி 6ந்தேதி நடைபெற்ற போராட்டத்திலும் காலிஸ்தான் கொடி பறந்தது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  தடை செய்யப்பட்டிருந்தவற்றை காலிஸ்தான் கொடியை விவசாயிகள் காட்டியிருந்தால் தவறு என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் அமைதி வழி போராட்டம் கொஞ்சம் கொஞ்சம் திசை மாறிச் செல்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலயிருப்பது குறிப்பிடத்தக்கது.