கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .
‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகிய நடிகர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதால், ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடஙகும் என்றுஅறிவித்திருந்தது படக்குழு .
அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) பெங்களூருவில் உள்ள ஸ்டுடியோவில் 10 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்சிகளைப் படமாக்குகிறார்கள்.
சமூக வலைதளத்தில் இதன் புகைப்படங்கள் வெளியாகி இந்திய அளவில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.