‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள், ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராதவிதமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.