கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .
‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் பிரசாந்த் நீல் இயக்க, இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் ரமீகா சென் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரவீனா டண்டன் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது.
இந்த நிலையில், இன்று ‘கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.