லண்டன்:

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியில் ஓரம் கட்டப்பட்டார்.

உள்ளூர் போட்டிகளிலும், கிரிக்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக இப்போது அறிவித்துள்ளார். இது குறித்து பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்த எனது குடும்பத்தாருக்கு நன்றி.

ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி. அனைத்தையும் நினைத்து பெருமைப்படுகிறேன். உங்களை என் விளையாட்டால் மகிழ்ச்சிப்படுத்தி இருப்பேன் என நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் ரசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.