திருச்சூர்
கேரளாவின் மாநிலப் பழம் எனப் பெயர் பெற்றுள்ள பலாப்பழத்துக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அதிக அளவில் விளையும் பழமான பலாப்பழம் பச்சை நிறத்துடன் மேலே முட்கள் அடர்ந்து ஒரு தனி மணத்துடன் காணப்படும் பழமாகும். இந்த பலாப்பழத்துக்கு நாடெங்கும் மட்டுமின்றி உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது இந்தப் பலாப்பழத்தைப் புத்திசாலிகளின் பழம் என ஒரு உணவு நிபுணர் புகழ்ந்துள்ளார். இந்த உணவு தெற்காசியாவில் புகழ்பெற்ற பழமாக இருந்தது. தர்பொது உல்கெங்கும் உள்ள சைவர்களால் மாமிசத்துக்கு மாற்று என புகழப்படுகிறது.
கேரள மாநில திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பலாப்பழ தோட்ட உரிமையாளர் வர்கீஸ் தரக்கன், “தற்போது பல உலக நாடுகளில் இருந்து பலாப்பழத்துக்கு ஏராளமான வர்த்தக விசாரணைகள் வந்து குவிகின்றன. பலாப்பழம் மீதான ஆர்வம் அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. பலாப்பழம் காயாக இருக்கும் போது இருந்தே பயன் தருகிறது. அதைச் சமைத்து உண்பது வழக்கமாயுள்ளது.
பழமானபிறகு அதன் சுளைகளின் சுவை பலரையும் கவர்ந்து இழுக்கிறது. அதனால் பழம் செல்லும் இடம் எல்லாம் மக்களைக் கவர்கிறது தற்போது சான்ஃப்ரான்சிஸ்கோவில் இருந்து லண்டன் வரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிற்து. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய கொரோனா தாக்கம் ஆகும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்
கொரொனா தொற்று அச்சத்தால் வெளிநாட்டில் இறைச்சி உண்பது குறைந்துள்ளதால் இறைச்சிக்கு மாற்றாகப் பலாப்பழம் உண்ணப்படுவதாக மைக்ரோசாஃப்ட் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் ஜோசப் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மேலை நாடுகளில் பலாப்பழத்துக்குக் கிராக்கி உள்ளதால் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு பலாப்பழ வர்த்தகத்தில் முழு மூச்சுடன் இறங்கி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2019 ஆம் வருட அறிக்கை சைவ உணவு ஒரு வாரத்துக்கு ஒரு நாளாவது முழுமையாகச் சாப்பிட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. அதன்படி பல மேலை நாடுகளில் திங்கள் அன்று மாமிசம் அற்ற தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி பலரும் சைவ உணவுக்கு மாறி வரும் வேளையில் பலாப்பழம் ஒரு முழுமையான உணவாகப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்
பலாப்பழத்தை பவுடராக்கி அதைக் கோதுமை மற்றும் அரிசி மாவுடன் கலந்து சமைப்பது தற்போது மேலை நாடுகளில் வழக்கமாக உள்ளது. பலாப்பழம் இனிப்பு சுவையுடன் இருக்கும் போதிலும் பலாப்பழ மாவு இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிப்பது இல்லை என உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் எனவே பலாப்பழம் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வோருக்கும் விருப்ப உணவாக உள்ளது.
பலாப்பழத்துக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமே தினசரி 100 டன் தேவை உள்ளது. தற்போது வங்கதேசம் மற்றும் தாய்லாந்தில் மட்டும் பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் கேரளாவில் வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டும் பயிர் செய்யப்படட பலாப்பழம் வர்ததகப் பயிராகி உள்ளது ஒரு நல்ல வளர்ச்சி என உணவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பழத்தின் கிராக்கிக்கு முக்கிய காரணம் அசைவ உணவு விரும்பிகளும் இந்த பழத்தில் ஆர்வம் காட்டுவது தான் என கூறப்படுகிறது.