கொல்லம்
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ராஜு என்பவர் மிக திறமையான ஓவியராக உள்ளார்.
உலகின் புகழ் பெற்ற ஓவியர்களில் பலர் இந்தியாவில் இருந்தவர்கள் ஆவார்கள். குறிப்பாக கேரளாவை சேர்ந்த ரவி வர்மாவின் ஓவியங்கள் இன்றளவும் புகழ் பெற்று உள்ளன. தற்காலத்திலும் இந்தியாவை சேர்ந்த எம் எஃப் ஹுசைன் உலகப் புகழ் பெற்ற ஓவியராக உள்ளார்.
ரவி வர்மா வசித்த கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் வசிக்கும் ராஜு என்பவர் சற்று மனநிலை பிறழ்ந்தவர் ஆவார். இவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் சுவற்றில் ஓவியம் வரைந்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனது சுவர் ஓவியங்களில் விதம் விதமான மண், புற்கள், போன்றவற்றை மட்டும் பயன்படுத்துகிறார்.
சுவரில் இவர் பிரஷ் இல்லாமல் கையால் வரையும் ஓவியங்கள் பலரையும் கவர்கின்றன. ஆனால் இவர் அதை பிச்சை எடுத்து பிழைக்க பயன்படுத்துகிறார். இவருடைய திறமைக்கு முன்பு பல ஹுசைன்களின் ஓவியங்கள் கேள்விக் குறி ஆகின்றன. ஆயினும் இவருடைய ஓவியங்கள் யாருக்கும் தெரியாமல் உள்ளன.
https://twitter.com/PiyushSinghk/status/1133571632872775681?fbclid=IwAR262DQV19zM4NRuQwDTW6aURNbeQadpWTT6LRtq5zleEyltGon-qjjxwC0
இவருடைய ஓவியம் வரையும் திறனை கேரளாவை சேர்ந்த நெட்டிசன் ஒருவர் வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிந்துள்ளார். அந்த பதிவு பலராலும் பதியப்பட்டு வைரலாகிறது.