கேரளா:
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பின்னர், இது ஒரு பொய் புகார் என்று நீதிமன்றத்திற்கு தெரியவந்தது, ஐபிசி பிரிவு 182 (பொய்யான வழக்கு மற்றும் அரசு ஊழியருக்கு களங்கம் ஏற்படுத்துவது) கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக இரவும் பகலும் உழைத்து வந்த, மாநிலத்தில் உள்ள ஏழை சுகாதார ஊழியர்களுக்கு ஏற்பட்ட சேதம் ஈடுசெய்ய முடியாதது, இந்த செயலால் சுகாதார ஊழியர்களின் மன உறுதியும் பாதிக்கப்பட்டுள்ளது, அத்தகைய சுகாதார ஊழியரின் பெயரில் பொய் புகாரளித்த பெண்மணிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.