ஒரே கிராமத்தில் 200 பேருக்கு கொரோனா..

Must read

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ், காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அங்குள்ள வயநாடு மாவட்டம் தாவின்ஹால் பஞ்சாயத்தில் உள்ள வாலட் என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் உயிர் இழந்தார்.

இரு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள், அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
அவர்களில் 7 பேருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த மலைக்கிராமத்தில் பலருக்கும் கொரோனா இருப்பது ஊர்ஜிதம் ஆனது.

இதுவரை அந்த ஊரில் 199 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

-பா.பாரதி.

More articles

Latest article