கேரளாவில் சீனாவின் தயாரிப்பான செயற்கை முட்டைகள் விற்கப்படுவதாக சில ஊடகங்களில் வந்த செய்தியையடுத்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா இச்செய்தி உண்மையா என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது செயற்கை முட்டை கேரளத்தில் விற்கப்படுவதாக தனக்கு அதிகாரபூர்வ தகவலோ அல்லது புகாரோ எதுவும் வரவில்லையென்றாலும் ஊடகங்களில் இது பற்றி வந்த செய்திகளில் உன்மை இருக்கிறதா என்பதை கண்டறியவே தாம் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டம் வழியாகத்தான் கேரளத்துக்குள் செயற்கை முட்டை நுழைந்ததாக செய்திகள் பரவுகின்றன. இடுக்கியின் மருத்துவத்துறை அதிகாரி இதுபற்றி ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
செயற்கை முட்டைகள் பிரளென் நிறத்தில் இருக்கும். இதை பூச்சிகள் அண்டாது. மேலும் இம்முட்டைகள் பச்சையாக இருந்தாலும், சமைக்கப்பட்டிருந்தாலும் பல நாட்கள் ஆனாலும் கெடாது என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.