திருவனந்தபுரம்:
இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.1000 கோடி மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, ஜன.31-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கேளர அரசு அறிவிக்கவுள்ளது.
கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரூ.1,000 ஆயிரம் கோடி அளவுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வரும் 31-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் இது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விட இது சிறந்ததாக இருக்கும். கேரள அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டம் காணாமல் போய்விடும்.
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை தேர்தலில் பிரதானமாக பாஜக முன் வைக்கக் கூடும் என்பதால், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு புதிய காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருகிறது.
மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் கேரளாவில் 18 லட்சம் குடும்பங்கள் மட்டுமே பயன்பெறுவர். ஆனால், கேரள அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 43 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர்.
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை ப்ரீமியம் செலுத்தி, ரூ. 5 லட்சத்துக்கான காப்பீட்டை பெற முடியும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதியை பகிர்ந்து கொள்கின்றன..
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் கேரளாவில் பயன்பெறுபவர்கள் குறைவு என்பதால், இதனை கேரள அரசு எதிர்க்கிறது என்றார்.