திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் பாதிப்புகளை குறைப்பதற்கு அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அம்மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்குள்ளாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அம்மாநிலத்திற்குள் வரும் அனைத்து ரயில் பயணிகளும், மாநில எல்லைகளின் முதல் ரயில் நிலையங்களிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதுதவிர, வேறு மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் பேருந்துகளும் மொத்தம் 24 சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
மேலும், விமான நிலைய சோதனைகள் மாநில காவல்துறை கண்காணிப்பாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.