திருவனந்தபுரம்

கேரளாவில் ஒரேநாளில் 10 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரளாவில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை தடுக்க தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.  இதற்காக 1098 என்ற இலவச தொலைபேசி சேவையும் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கடந்தவாரம் இந்த எண்ணுக்கு கருவார்குண்டு என்ற பஞ்சாயத்திலிருந்து பேசிய ஒரு பெண், பள்ளியில் படித்துவரும் தனக்கு அடுத்து வரும் கோடை விடுமுறையில் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்திருப்பதாக கூறினாள். ஆனாள் அந்தப் பெண் தொடர்ந்து படிக்கவிரும்புவதாகவும், அந்த திருமணம் நடந்தால், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அழுதுகொண்டே கூறினாள்.

இதையடுத்து அந்த கிராமத்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தொண்டு நிறுவன ஊழியர்கள் தகவல் அளித்தனர். கிராமத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 10 சிறுமிகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தது தெரியவந்த து.  இவர்களில் இரண்டு பேர் 15 வயதினர் என்றும் மற்றவர்கள் 16 வயதினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.