திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதிதாக 7834 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 211075 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4474 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 1,39,620 ஆக உள்ளது. தற்போது 80818 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.