திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து 6, 684 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
21 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழக்க, இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் 46 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகபட்சமாக கோழிக்கோடில் 574 பேரும், மலப்புரத்தில் 558 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆலப்புழாவில் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.