திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக 3,757 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஒட்டு மொத்த பாதிப்பு 5,58,389 ஆக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 2,071 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 5,425 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,00,089 ஆக உள்ளது. இன்னமும் 64,166 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.