திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியாது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக முஸ்லிம் லீக் தான் பெரிய கட்சியாக உள்ளது. தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந் நிலையில் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது. முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு முகமது அலி ஷிஹாப் வேட்பாளர்களை அறிவித்தார். புனலூர், சடயமங்கலம் மற்றும் பேராம்பிரா ஆகிய 3 தொகுதிகள் தவிர மற்ற 24 தொகுதிகளுக்கும், மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கோழிக்கோடு தெற்கு தொகுதியில் நூர்பினா ரஷீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 1996க்கு பின்னர் தற்போது தான் முஸ்லிம் லீக்கில்  பெண் வேட்பாளர் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.