கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரளா மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கண்ணூர் தொகுதியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பினராயி விஜயன் கூறியதாவது: 2016ம் ஆண்டின் தேர்தலில் நேமம் என்ற தொகுதியில் பாஜக தமது எம்.எல்.ஏ.கணக்கை தொடங்கியது.

ஆனால் இந்த தேர்தலில் அதே தொகுதியில் பாஜக கணக்கு முடித்து வைக்கப்படும். மக்களுக்கு மத வெறியை ஊட்டி பிரிவினையை ஊட்ட முயன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்கள் எதுவும் நிறைவேற வில்லை.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ், பாஜக காலூன்ற முடியாமல் போக மக்களிடம் உள்ள மத சார்பின்னமை என்ற நிலையான உறுதிப்பாடு தான் கரணம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக ஆகியவை உள்ளே வராமல் இருக்க இடதுசாரிகள் முன்னிலையில் நின்றிருப்பதே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.