திருப்பூர்:
கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி எந்தவித தகவலும் கிடைக்காததால், வாலிபர்கள்ள ஐஎஸ்ஐஸ் இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இது குறித்து கேரள போலீசார் தனிப்படை ◌அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கேரளாவில் மாயமான வாலிபர்களில்  2 பேர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பூர் வந்த கேரள போலீசார் திருப்பூர் போலீசார் உதவியுடன்  திருப்பூரில் இருப்பதாக அம்மாநில சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து கேரள போலீசார் நேற்று இரவு திருப்பூருக்கு வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர போலீசார் உதவியுடன் அந்த வாலிபர்களை தேடினர்.  திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் பெயர்  சல்மான், சமீர்   என்பதும் இருவரையும் இரவோடு இரவாக  கேரள போலீசார் அழைத்துச் சென்றனர்..
மீட்கப்பட்ட இரண்டு வாலிபர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏதேனும் உண்டா என்பது பற்றி கேரள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.