கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை யொட்டி, மக்கள் வீடுகள் தோறும் பூக்கோலம் போடுவது வழக்கம்.
கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து பூக்களை தருவிக்க கேரள அரசு தடை விதித்தது.
ஓணம் பண்டிகைக்கு தமிழகத்தில் இருந்து தான், பல கோடி ரூபாய் மதிப்பிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். கேரள அரசின் தடையால் டன் கணக்கில் மலர் சாகுபடி செய்திருந்த ஒசூர் பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
’’பக்கத்து மாநிலங்களில் இருந்து பிற பொருட்களை கொண்டுவரும் நிலையில் மலர்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுப்பு?’’ என கேள்வி எழுந்தது.
இதனால் கேரள அரசு, அண்டை மாநிலங்களில் இருந்து பூக்களை வாங்கி வரலாம் என மலர் வியாபாரிகளுக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
-பா.பாரதி.