சினிமா வாய்ப்பு ஆசைக்காட்டி அமெரிக்கா பெண் பாலியல் பலாத்காரம்!! போட்டோகிராபர் கைது

கொச்சி:

கேரளா மாநிலம் கொடுங்காலூரை சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன். 33 வயதாகும் இவர் மலையாள சினிமா துறையில் போட்டோகிராபராக பணியற்றி வருகிறார். இவர் அமெரிக்கா குடியுரிமை பெற்ற ஒரு 24 வயது பெண்ணை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததோடு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

படபிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஜின்சனுக்கு அந்த பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேரளாவுக்கு அந்த அடிக்கடி வந்துள்ளார். 2 படங்களில் சிறுமி வேடத்திலும் நடித்துள்ளார். அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் போட்டோ எடுத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கும் காண்பித்து ஜின்சன் ஆதாயம் தேடியுள்ளார்.

அதோடு அந்த பெண்ணின் வீட்டு பணிப்பெண்ணிடம் இவரது முழு விபரங்களையும் கேட்டறிந்துள்ளார். பின்னர் ஒரு பேப்பரில் பெண்ணின் பெயரை எழுதி மெழுகுதிரியில் காண்பித்து, அந்த பெண் குறித்த அனைத்து விபரங்களையும் அந்த பெண்ணிடமே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனக்கு பேயோட்டும் சக்தி இருக்கிறது என்றும், சில இயற்கையான விஷயங்கள் தெரியும் என்று கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் பல முறை பாலியல் உறவு கொண்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி முதல் இத்தகைய சம்பவங்களில் ஜின்சன் செய்துள்ளார்.

ஜின்சனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்த பிறகு தான் அவர் மோசடி பேர்வழி என்பது அ ந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது, காசோலை கொ டுத்துள்ளார். அதுவும் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.

போலீசாரிடம் சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் ஜின்சனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Kerala: Lensman 'rapes' US-based women promising movie roles