திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பால் ஒரு மாதத்திற்கு இலவச ரேசன் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க ரேசன் ஊழியர்கள், பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது…

இந்தியாவில் முதல் கொரோனா தொற்றும் கேரளாவில்தான் பதிவான நிலையில், முதன்முதலாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதாக அறிவித்தும், தற்போது அதை , பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத முறையில், க புதிய வகையிலான நடைமுறையை பின்பற்றி வருகிறது...

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை தொடர்ந்து தற்போதுவரை 101 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கும் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  மாநிலத்தில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.20 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானம் இழந்து நிற்கும் மக்களுக்கு கடன் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரே‌ஷன் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அந்தியோதியா பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கு பொதுமக்களுக்கு இலவச ரேசன் அரிசி வித்தியாசமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி எடை போடும் தட்டுடன் நீண்ட உருண்டை வகையிலான இணைப்பு சேர்க்கப்பட்டு, எடை போடப்படும் அரிசியானது பொதுமக்களின் பைகளில் விழும் வகையில் அசத்தலாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.