திருவனந்தபுரம்:
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள் டிராக்டருடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேரணியில் அந்த எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டி அசத்தினார். மலர்கள் தூவப்பட்டிருந்த பச்சை நிற டிராக்டரை ராகுல் காந்தி முட்டில் என்ற பகுதி வரை இயக்கினார். சுற்றிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஓடி வந்தபடி இருந்தனர். இதேபோல காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல் காந்தி இயக்கிய டிராக்டர்கள் பின்னால் தங்களது டிராக்டர்களை ஓட்டியபடி வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Patrikai.com official YouTube Channel