திருவனந்தபுரம்: கேரளாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் ஜலீல் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாகவும் எனவே அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும் லோக் ஆயுக்தா கூறியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் ஜலீல் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனை கடந்த சில நாள்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா வலியுறுத்தியது. லோக் ஆயுக்தா உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஜலீல் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முன்பு ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.