திருவனந்தபுரம்,

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள ஐகோர்ட்டு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கேரள ஐகோர்ட்டு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த  2013 ஆண்டு நடைபெற்ற  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

ஆனால், மேட்ச் பிக்சிங் வழக்கை விசாரித்த டில்லி   நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று ஸ்ரீசாந்த் உள்பட 36 பேரை விடுதலை செய்தது.

ஆனால், பிசிசிஐ தான் விதித்த தடை உத்தரவை  மாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்துவிட்டது. மேலும், குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை. சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது.

இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஸ்ரீசாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீக்கி கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.