தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா..

கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்தை தாண்டி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகிறது.

நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில்  ஆயிரத்து 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் உயிர் இழந்தனர்.

இதுவரை அங்கு ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்தது இல்லை.

ஆனால் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கேரளாவில் நடைபெறும் திருமணத்தில் 50 பேர் மட்டும் திரளலாம் என விதி உள்ளது.

ஆனால் கடந்த 9 ஆம் தேதி கோழிக்கோடு பக்கம் செக்கியாடு என்ற இடத்தில் டாக்டர் ஒருவர் திருமணத்தில் 100 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், கல்யாணத்துக்கு 20 பேர் மட்டுமே வரவேண்டும் என கேரள அரசு நேற்று புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதுபோல் இறுதி சடங்கு நிகழ்ச்சியிலும் 20 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.