திருவனந்தபுரம்

ரும் நவம்பர் 1 முதல் காய்கறிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையைக் கேரள அரசு அறிமுகம் செய்கிறது

தற்போது உணவு தானியங்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை அமலில் உள்ளது.  இந்த விலையில் அரசு தானியங்களைக் கொள்முதல் செய்கிறது.  அத்துடன் தனியார் வர்த்தகர்களும் இந்த விலைக்கு குறைந்து கொள்முதல் செய்ய அரசு தடை விதித்துள்ளது.  விவசாயிகளின் உற்பத்திக்குச் சரியான விலை கிடைக்க இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று கேரளாவில் மாநில வேளாண் துறை காய்கறிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை நவம்பர் 1 முதல் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் 16 காயகமாகல் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை எடுத்துள்ள முடிவின் படி இந்த திட்டம் உள்ளாடசி அமைப்பு மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் அமல்படுத்தப்பட உள்ளது

இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் வரும் காய்கறிகளை விவசாயிகள் பெருமளவில் உற்பத்தி செய்வார்கள் எனவும் கேரளாவில் காய்கறி உற்பத்தி அதிகரிக்கும் எனவும் வேளாண் அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.   இந்த காய்கறிகளின் உற்பத்தி செலவு மற்றும் உற்பத்தி அளவின்  அடிப்படையில்  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சுமார் 1600 ஆரம்ப வேளான் கூட்டுறவுச் சங்கங்கள்  விவசாயிகளிடம் இருந்தும் மொத்த சந்தைகளில் இருந்தும் கொள்முதல் செய்ய உள்ளது.  இதற்கு நிதி உதவி தேவைப்பட்டால் உள்ளாட்சி அமைப்புக்கள் வழங்க உள்ளது. இந்த கொள்முதல் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது.

[youtube-feed feed=1]