திருவனந்தபுரம்

ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது.

பல மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும்  இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி வருகின்றது..   இந்த நிலை கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத பல மாவட்டஙளில் ஏற்பட்டுள்ளது.   சமீபத்தில் சத்ஹீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் அனுசுயா உயிகிக்கும் மோதல் வலுத்துள்ளது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி மதன்மோகன் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது.  இந்த ஆணையத்தின் ஆய்வறிக்கையை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கருத்துக் கோரி அனுப்பி வைத்தது.

இதில் கேரள அரசு தனது கருத்தில்,

”அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்குப் பல முக்கிய பொறுப்புகள் இருப்பதால் அவருக்கு பல்கலைக்கழக வேந்தர் பதவி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநரை நியமிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.  ஆளுநர் பதவியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு பொருத்தமான நபரை மட்டுமே நியமிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என்பது அந்தப் பதவிக்குத் தடையாக இருக்கக்கூடாது.

அரசியலமைப்பு சட்டத்தை மீறினாலோ, பல்கலைக்கழக வேந்தர் பதவி மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளில் தவறு செய்தாலோ ஆளுநரை நீக்க மாநிலச் சட்டசபைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.   ஆளுநர்க்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்து முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனுமதிக்காக அரசு அனுப்பும் மசோதாக்கள் காலதாமதம் இல்லாமல் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.