திருவனந்தபுரம்:

கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை அம்மாநில ஆளுநர் சதாசிவம் அளித்துள்ளார்.

சமீபத்தில்  வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே கடலில் இருந்தபடியே தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை தாக்கியது. . இதனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஓகி புயல் குறித்து வானிலை மையம் சரியான நேரத்தில் எச்சரிக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள முடியவில்லை என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

அவர் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.  ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிப்பார்கள் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.